Navarathiri

அறிவிப்பு : 26.06.2020 முதல் www.sribalajidevotion.com ஆக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது அன்பர்கள் அனைவருக்கும் மாற்றத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி. ✸✸✸✸✸

குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை பாடல் 


Kurai Ondrum Illai  


குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா !
குறை ஒன்றும் இல்லை கண்ணா !
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா !!   1


கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா !
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு !
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா !!   2

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க !
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா !
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா !!  3

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா !
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா !
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் !
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் !
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா !!   4

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா  !
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா !
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா !
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா !!   5

கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி !
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா !
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா !
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா !!   6

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் !
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் !
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை !
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு !
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு !
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா !
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா !!  7

*************




Popular Post