Navarathiri

அறிவிப்பு : 26.06.2020 முதல் www.sribalajidevotion.com ஆக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது அன்பர்கள் அனைவருக்கும் மாற்றத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி. ✸✸✸✸✸

தெய்வத்தை கண்ட வேங்கமாம்பா

தெய்வத்தை கண்ட வேங்கமாம்பா

ஆந்திராவில் தரி கொண்டா கிராமம்.

அக்கிராமத்தில், தந்தையார் கிருஷ்ணய்யமத்யா, அவரது மனைவி மங்கமாம்பா என்ற தெய்வீக தம்பதிகளுக்கு பிறந்தவர். 

புரட்சி பெண்மணி வேங்கமாம்பா. !

அவர் எப்பொழும் வீட்டின் தனது துளசி மாடத்தின் முன் வேங்கடமுடையானை    “ ஓம் நமோ நாராயணா ” என்று மன முறுகி , மன பக்தியுடன் மூன்று முறை துளசி மாடத்தை சுற்றி, புனித  நீர்  ஊற்றி வணங்குவாள்.  

வேங்கமாம்பா சிறு வயதில், துளசி மாடத்தை சுற்றும் பொழுது, வேங்கடவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றாள்.

அவ்வாறாக, அவர்களின் பக்தி அபாரமாக வேங்கடவன் மீது பக்தியும் வளர்ந்தது.

பின் இளம்வயதில் திருமணம் முடிக்க எண்ணி வேங்கடாசலபதி என்ற மணமகனை மாப்பிள்ளையாகப் பார்த்தார் அவரது தந்தையார்.

மகள் வேங்கமாம்பாவுக்கு விபரம் தெரிய வேங்கடவனைத் தவிர யாரையும் மாலையிடமாட்டேன் என்றார். நாம் தெய்வத்தினை நினைக்க கூடாது. 

மனிதப் பிறவி ஆதலால், அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு அவருக்கே மணம் முடித்தனர். 

அவ்வாறாக முடிந்ததும், அவரது கணவர் அவரை மிகவும் மரியாதையோடும், உயர்வோடும், அவர் பக்தியையும். அவரையும் போற்றினார். 

பின் தனக்கு ஏதேனும் தகாத செயல் ஏற்பட்டு, மரணம் அடைந்ததும்.. அவர் தான் கேட்ட வரத்தின் படி, தன் இறப்பின் பின் வேங்கமாம்பாவின் மங்கல கோலத்தைக் கலைக்க கூடாது, மேலும், “  சுமங்கலியாக வேங்கடவனின் பத்தினியாக, மகாலட்சுமியாக வாழ வேண்டும்.” என்று கோரினார்.

அதன் படி கணவனின் சொல் படி நடப்பதாக கூறினார்.

அதன் படி, ஒரு நாள் அவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்.

சடங்குள் அவரை கைம்பெண் ஆக்க   முயன்றன.

பின் எதற்கும், அசைந்து கொடுக்காத, அவர் எப்பொழுதும் போன்றே சுமங்கலியாக  கும்குமம் பூசிய முகத்துடன் திருமலைக்கு புறப்பட்டு விட்டார்.

வழியில் சுப்ரமணிய ஆச்சாரியார் அவர்களிடம்  கல்வி, சாஸ்திரம் பயின்றார். 

அண்ணமாசாரியார் அவர்களின் வாரிசுகள் அவரை திருமலையில் வரவேற்றன.

இன்று ஏழுமலையானின் தோளில் துளசி மாலையாக, அணிவிப்பதன், காரணம் அவர், வேங்கடமுடையானுக்கு தினமும் துளசி மாலை கட்டி அணிவித்து ஆரத்தி எடுப்பார்.

அதைப் பொறுக்காத அர்ச்சகர் அவர் மீது  வீண் பழி சுமத்தி நகை ஓன்றை ஒளித்து வைத்தார்.

இதனால், அவர் திருமலை விட்டு வெளியேறி,  தும்பூர் கிராமத்தில் ஆறு ஆண்டு கடும் தவம் புரிந்தார்.

சுரங்கம் அமைத்து வெங்கடமுடையானுக்கு பூமாலையும், பாடல்களையும் புனைந்து வந்தார்.

தாங்கள் பூஜை செய்வதற்கு முன்பே பூமாலையும் அணிந்திருப்பது கண்டு, அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அர்ச்சகரின் கனவில் தோன்றிய “ வேங்கடமுடையான் வேங்கமாம்பா அம்மைதான் பூமாலையும் சாத்த வேண்டும், அதுவே தனக்கு உகந்தது " என்று கூறி அர்சர்கரின் கனவில் தோன்றி மறைந்தார்.

இதன் பின், பழி சுமத்திய அர்ச்சகர் பெருநோய் கண்டார். நான் அம்மைக்குச் செய்த பாவமே என்று எண்ணி மக்களிடம் மனிப்பு கேட்டார்.

இதன் பின், அவருக்கு வேங்கடமுடையான் தானே வேடுவர் வேடத்தில் வந்து அம்மையார் இருக்கும், இடத்திற்கு வந்து, அர்ச்சகரை விட்டுச் சென்றார். பின் வேடுவன் மறைந்து விட்டதை எண்ணி இது “ வேங்கடமுடையான் விளையாட்டு ‘ என்று அன்னையிடம் மன்னிப்பு கேட்டார். 

தன்னிடம் உள்ள யோக சக்தியால்  மக்களின் குறைகளைத் தீர்த்து வைத்தார். 

பசியால் பிச்சையெடுத்த ஒருவரின் நிலை கண்டு,  மக்களை நினைத்து வேங்கடமுடையான் மீது பக்தி கொண்டு அன்னக்கூடங்கள் கட்டினார்.

அதில் பகலும், இரவும் அன்னம் பரிமாறப்பட்டன.

இப்பொழுது அது “ தரிகொண்ட வேங்கமாம்பா அன்ன பிராசத மையம் “ என அழைக்கப்படுகிறது.

இன்று அது வேங்கமாம்பாவின் பாடலோடும், கற்பூர ஆரத்தியோடும் நடை சாற்றப்படுகிறது. 
இது வேங்கமாம்பா ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது.

இவரது பெயரிலேயே வேங்கமாம்பா பிருந்தாவனம் உள்ளது.

இவரது அற்புதங்கள் எண்ணற்றவை. பலரது நோய்களையும் குணமாக்கியும், மக்களுக்கு பல நன்மைகளையும், பக்தியையும் அயராது மக்களிடம் பரப்பிய மகான் ஆவார்.

இவ்வாறு அவர் தன் இறுதி நாட்களில் திருவேங்கடமுடையான் நினைத்து திருமலையிலேயே கி.பி. 1817ம் ஆண்டு தனது 87 வயதில் பகவான் திருமலையானுடன் இரண்டறக்கலந்தார்.

அவர் இயற்றிய நூல்கள்

தரி கொண்ட நரசிம்ம சதகம்

நரசிம்ம விலாச கதா

சிவ நாடகம்

பாலகிருஷ்ண நாடகம்

யட்ஷ கானம்

ராஜ யோகம் ருத சாரம்

த்விபத காவியம்

விஷ்ணு பாரிஜாதம்

முந்தி கந்தி விலாசம்

ராம பரிணயம்

ஸ்ரீ பாகவதம்

ஸ்ரீ  கிருஷ்ண மஞ்சரி

வசிஷ்ட ராமாயணம்

ஸ்ரீ வேங்கடாசல மஹாத்யம்

அஷ்டாங்க யோக சாகரம் 

என்ற நூல்களை எழுதினார்.
                ******

தயாரிப்பு       :   ஸ்ரீ பாலாஜி




Popular Post