பஞ்சமுக ஆஞ்சஜநேயர் ஸ்தோத்திரம்
(Panchamuga Anjaneyar)(Panchmugha Anjeneyar Stotras)
நரசிம்மம் - தெற்கு முகம்
கருடன் - மேற்கு முகம்
வராகர் - வடக்கு முகம்
ஹயக்ரீவர் - மேல் முகம்
ஹனுமார்
பகைவர்களால் ஏற்படும் தொல்லை நீங்கும் .
(கிழக்கு முகம்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே !
ஸகல சத்ரு ஸம்ஹா ரணாய ஸ்வாஹா ! 1
நரசிம்மம்
எல்லாவித பயங்கள், தோஷங்கள், துர் தேவதைகள் தோஷங்கள், நீங்கும் .
(தெற்கு முகம்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே !
கரால வதனாய நிருஸிம்ஹாய !
ஸகல பூத ப்ரேத ப்ரமதனயா ஸ்வாஹா ! 2
கருடன்
எல்லாவித உடல் உபாதைகள் , விஷக்கடி , விஷ ஜுரங்கள் நீங்கும் .
(மேற்கு முகம் )
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பச்சிம !
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா ! 3
தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.
(வடக்கு முகம்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே !
ஆதி வராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா ! 4
ஜன வசீகரம் ,வாக்கு பலிதம் , கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
(மேல் முகம்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே !
ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா ! 5
******
ஸ்ரீ ஹனுமத் ஸ்தோத்திரம்
சிறிய திருவடி
(Hanuman Stotras - Siriya Thiruvadi)
அஞ்ஜநா நத்தநம் வீரம் !
ஜாநகீ ஶோக நாஶநம் !கபீஶ மக்ஷஹந்தாரம் !
வந்தே லங்கா பயங்கரம் ! 1
ஆஞ்சஜநேய மதிபாடலாநநம் !
காஞ்ச நாத்ரி கமநீய விக்ரஹம் !
பாரிஜாத தருமூல வாஸிநம் !
பாவயாமி பவமாந நந்தநம் ! 2
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தநம் !
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம் !
பாஷ்பவாாி பாிபூா்ண லோசநம் !
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ! 3
மநோஜவம் மாருத துல்ய வேகம் !
ஜிதேந்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் !
வாதாத்மஜம் வானரயூத முக்யம் !
ஶ்ரீ ராம தூதம் ஶிரஸா நவாமி !
பாாிஜாத தருமூல வாஸிநம் பாவயாமி பவமாந நந்தநம் ! 4
புத்திர்பலம் யஶோ தைர்யம் !
நிர்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வம் ச !
ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ! 5
அஸாதீய ஸாதக ஸ்வாமிந் !
அஸாதீயம் தவ கிம் வத !
ராம தூத க்ருபாஸிந்தோ !
மத் கார்யம் ஸாதய ப்ரபே ! 6
ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே !
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே ! 7
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் !
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா !
அலகிலா விளையாட்டுடை யாரவர் !
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே ! 8
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே !
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே !
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே !
இம்மையே இராமஎன் றிரண்டெ ழுத்தினால் ! 9
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி !
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி !
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கை கண்டயலார் ஊரில் !
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான் ! 10
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் !
வீடியல் வழிய தாக்கும் வோியம் கமலை நோக்கும் !
நீடிய அரக்கா் சேனை நீறுபட் டழிய வாகை !
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோா்க்கே ! 11
மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந் திரத்தை முற்றும் !
தம்மையே தமா்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே !
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் (என்னும்) !
செம்மைசோ் நாமம் தன்னைக் கண்களில் தொியக் கண்டான் ! 12
******
ஆஞ்சஜநேயர் ஸ்தோத்திரம்