Navarathiri

அறிவிப்பு : 26.06.2020 முதல் www.sribalajidevotion.com ஆக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது அன்பர்கள் அனைவருக்கும் மாற்றத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி. ✸✸✸✸✸

பக்தர்கள் குறைந்த பட்சமாக அனுஷ்டிக்க வேண்டியவை !



Temple Vazhi padu murai



பக்தர்கள் குறைந்த பட்சமாக அனுஷ்டிக்க வேண்டியவை !


1. எல்லோரும், எப்போழுதும் அஹிம்ஸையைக் கடைப் பிடிக்கவேண்டும்.

2 . தினந்தோறும் தவறாமல் அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக் குறி அணியவேண்டும்.

3. அவர்வர் பெரியோர் பின்பற்றிவந்த ஆசார நியமங்களில் முக்கியமானவற்றையாவது கைவிடாமல் அனுஷ்டிக்க வேண்டும்.

4. வேதமறிந்த பெரியோர்களை அவமதிக்காமல் அவர்களைப் போற்றிக் கௌரவிக்க வேண்டும்.

5. காலத்தை வீணாக்காமல் சதா - அதாவது  நடந்து  செல்லும் போதும், பஸ், ரயில், இவற்றில் பிரயாணம் செய்யும் போதும் - பகவத் நாமாவை சப்தம் செய்யாமல் உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும்.

6 . அவரவர் சக்திக்கேற்ப பூஜை முறைகளையும், மற்றப் பண்டிகைகளையும் அனுசரிக்க வேண்டும்.

7 .  இயன்றவரை பகவானுக்கு நைவேத்தியம் செய்துவர வேண்டும்.

8 . எல்லோரிடமும், குறிப்பாக மூத்தவர்களிடம், விநயத்துடன் பழக வேண்டும்.

9. ஏழை, எளியவர்களுக்கு தம்மாலான, தான தர்மங்களைச் செய்ய வேண்டும்.

10.   உலகமனைத்தின் உள்ளத்தை வெல்லும் நட்பு மனப்பான்மையைக் கொள்ளவேண்டும்.

11 .  பிறரையும் தம்மைப் போலவே பாவித்து நல்வழியில் நடக்கவேண்டும்.

12.  விரோத்தின் விளைவாக உருவாகும் போட்டி மனப்பான்மையைத் தவிர்க்கவேண்டும்.

13 . பிறன் பொருளை அபகரிப்பதையும் பிறரை தூஷிப்பதையும் தவிர்க்கவேண்டும்.

14 . சாதுக்களிடம் அபசாரப்படாமலிருக்க வேண்டும்.

15.  ‘ ஸர்வேஜனாஸ் ஸுகினோ பவந்து ‘ என்று அடிக்கடி அவன் திருவடிகளை வணங்கி வழிபடவேண்டும்.


நூல்கலிருந்து தொகுப்பு : ஸ்ரீ பாலாஜி

🔆🔆🔆🔆🔆


Popular Post