Navarathiri

அறிவிப்பு : 26.06.2020 முதல் www.sribalajidevotion.com ஆக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது அன்பர்கள் அனைவருக்கும் மாற்றத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி. ✸✸✸✸✸

தொண்டரடிப் பொடியாழ்வார்



தொண்டரடிப் பொடியாழ்வார்

பச்சைமா மலைப் போல்மேனி பவளவாய் கமலச்செங்கண்   !

அச்சுதாவமரரேறே ஆயர்தம் கொழுந்தே யென்னும்   !

இச்சுவைதவிர யான்போய் இந்திரலோக மாளும்   !

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே  !!

----------    தொண்டரடிப் பொடியாழ்வார்.


மண்ணங்குடி திருத்தலத்தில் மார்கழி மாதம் கேட்டை நஷ்சத்திரத்தில் அன்று பிறந்தவர் தொண்டரடிப் பொடியாழ்வார்.

பெற்றோர் இட்ட பெயர் விப்ரநாராயணன்.

பாகவதர்களின் திருவடியை சேவையை போற்றியதால் “தொண்டரடிப் பொடி"  என்று காரணப் பெயரைக் கொண்டார்.


திருவரங்கத்தை அடைந்ததோடு அவர் திருவரங்கனுக்கு பூமாலை, திருத்துழாய் கட்டி கைங்கர்யம் செய்தார். 

அங்கு பணிசெய்த திருக்கரம்பனூரில் வசித்த தேவதேவி என்ற கணிகையை மணந்தார். 

திருவரங்கன் திருவிளையாடல் புரிய எண்ணி கோயிலின் திருவாரதனத் தங்க தட்டை எடுத்து தேவதேவியின் தாயிடம் விப்ரநாராயணன் பணியாள் அதை அவரிடம் கொடுக்க கூறியதாகவும் கூறினார். 

தேவதேவியின் தாயார் தங்கத்தட்டை கண்டதும், புளகாங்கிதம் அடைந்து விப்ரநாராய‍ணரை வீட்டின் உள்ளே அனுமதித்தாள். 

மறுநாள், திருவாராதன பொன் வட்டு ஒன்று காணமல் போனது அரசனுக்கு தெரிவித்தனர். 

அரசனும் அர்ச்சகர், பரிஜாரகர் ஆகியோரிடம் விசாரணை  நடத்தினார். தேவதேவி இல்லத்தில் பணி புரியும் பெண் அவர்கள் வீட்டில் முன் இரவுதான் விப்ரநாரயணின் தூதுவன் ஒருவன் கொடுத்ததாக கூறினார். 

விப்ரநாரயணரை சிறையில் அரசர் அடைத்தார். 

அன்றிரவு அரசர் கனவில் தோன்றிய திருவரங்கன், அவர் பக்தியோடு திருமாலை சமர்பித்தார் என்றும். அவரை ‘ ஆட்கொள்ள ’ தாமே  தங்கவட்டை எடுத்து கொடுத்ததாகவும் அவரை விடுவிக்க மலர்ந்தருளினார். 

இதன் பின்னர் அரசர் அமைச்சர்களுடன் சென்று அவரை விடுவித்தார். அதை அறிந்த விப்ரநாரயணர், அகமகிழ்ந்து திருவருங்கனை பலவாறாக போற்றினார். 

அவர் இயற்றிய பாடல்கள் 

1. நாற்பத்தி ஐந்து பாசுரங்கள் உடைய   -     திருமாலை. 

2. பத்து பாசுரங்கள்     -      திருப்பள்ளியெழுச்சி 

அரங்கனின் திருவடிகளில் சூட்டி உலகை வாழ்வித்தருளினார்.



ஆழ்வார் திருவடிகளே சரணம்  ! 
 

தயாரிப்பு        ஸ்ரீ பாலாஜி 





Popular Post